தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Tuesday, November 29, 2005

மீண்டும் மீண்டும் செய்திகள்

சன் பீதிகள்

வணாக்காம். தளய்ப்பு செய்திகல்.

குஷ்பூ தமிழ் பெயர் இல்ல்லை - லொல்.வெறிமாவளவன் கடும்தாக்கூ

ஜலதோசம் பிடித்தால் மரணம் நிச்சியாம் - மத்திய சுகாதர அமைச்சர் மாங்காமனி அறிவ்ப்பூ

என் பேரன் பாத்ரூம் போன பிறகு கை கால்களை நன்கு கழுவி கொண்டுதான் வருவான். மத்திய தொலைதொடர்பு அமைச்சர் தயாபதி குரங்கன் பற்றி நயாபைசாபதி பெருமிதம்.

"சிவாஜி" என்ற தமிழ் திரைப்படப் பெயரில், வட இந்திய "ஜ"வை நீக்க வேண்டும் - தமிழ் கலாசார கேவலன் சிரங்குதாஸ் ஆவேசம்..

தமிழகம் வெள்ளத்தில் மிதக்கிறதூ.. மக்கள் மத்தியில் ஒருவித பயம் பீதி பேதி நிலவுகிறது. அடுத்து என்ன நடக்குமோ என்று நடுங்கி ஊண் உறக்கம் இன்றி தவீப்பூ..

விரிவான செய்திகள்

குஷ்பூ தமிழ் பெயர் இல்லை, அவரை இனி குசு-பூ என்று தமிழில் அழைத்து செருப்பு மற்றும் துடைப்பக்கட்டை காட்டி மிரட்டலாம் என்று லொல்.வெறிமாவளவன் இன்று அவர் கட்சியினருக்கு தெரிவித்தார். குசு-பூ என்று சொல்பவர்கள், பெயர் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் இருக்க அருகதை அற்றவர்கள் என்று கு(உ)ரைத்தார்.

ஜலதோசம் பிடித்தால் மரணம் நிச்சியம் என்று மத்திய சுகாதர அமைச்சர் மாங்காமனி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தனக்கு தெரிந்த இருவர், ஜலதோசத்தினால் பாதிக்கப்பட்டு 3 நாட்களில் மூச்சு திணறி அவர்களது 103 வயதில் இறந்து போய்விட்டார்கள் என்றும், ஜலதோசத்தை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஜலதோசம் ஒரு தொற்று வியாதி என்றும், அவர்களை தனிமை படுத்தி சங்கிலியில் கட்டி வைப்பது மற்றவர்களுக்கு பாதுகாப்பு தரும் என்று தெரிவித்தார்.

இன்று காலை வேலை வெட்டி இல்லாத நயாபைசாநிதி எங்கள் செய்தியாளருக்கு அளித்த சிறப்பு பேட்டி

நயாபைசாநிதி: தமிழகம் பெற்றெடுத்த என் தங்க பேரன் தயாபதி, தினமும் பாத்ரூம் போன பிறகு கை கால்களை நன்கு கழுவி கொண்டுதான் வருவான். அப்போதே எனக்கு தெரிந்தது, இவன் வருங்காலத்தில் பெரிய தலைவனாக வருவான் என்று. நான் நினைத்தது போல் இப்போது மத்திய மந்திரி ஆகி, தினமும் ஒழுங்காக, மற்றவர்கள் மதிக்கும் படி, அவன் கை கால்களை அவனே கழுவி கொள்கிறான்.. அவனை நினைத்து நான் பெருமை படுகிறேன்.

இன்று சென்ட்ரல் அருகே கூவத்தில் இருந்த மர துண்டுகளை எடுத்து ரோட்டில் போட்டு கொண்டிருந்த தமிழ் கலாசார கேவலன் சிரங்குதாஸ், எமது செய்தியாளரிடம் ஆவேசமாய் பேட்டி குடுத்தார்

"சிவாஜி" என்ற தமிழ் திரைப்படப் பெயரில் உள்ள வட இந்திய "ஜ"வை நீக்க வேண்டும். இல்லா விட்டால் அறவழியில் தார்பூசுதல், படபெட்டி எரித்தல், கெட்ட வார்த்தையில் திட்டுதல், பத்திரிக்கை மற்றும் ஆள் வைத்து மிரட்டுதல் போன்ற அகிம்சை வழியில் எங்கள் போராட்டம் தொடரும். தமிழுக்கு ஒரு அவப்பெயரும் வராமல் காப்பது தான் என் கடமை. இதில் யாரேனும் தலையிட்டால்.. தலை இருக்காது என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், தமிழக மக்கள் பேய் அடித்தது போல் வாழ்கிறார்கள். யாரும் ஒழுங்காக தூங்காமல், உண்ணாமல் வானத்தையே அண்ணாந்து பார்த்து வாழ்க்கையை நடத்துகிறார்கள். அடுத்து என்ன ஆகுமோ என்ற ஒரு வித பீதி, பதற்றம் அவர்களிடையே நிலவுகிறது.

(மைக் பிடித்து கொண்டு ஒருவர்)
இந்த அரசாங்கம் எங்களுக்கு ஒண்ணுமே பண்ணல், வானம் பொத்து கிட்டு ஊத்துது ஒரு அதிகாரியும் வந்து ஏன்னு கேட்க்கலே, 10 நாளா சாப்பிடலே, எங்க வீட்டுல இருந்து ஏரி 5 அடி தூரத்துல இருக்கு. சின்ன மழை வந்தாலும் வீட்டுகுள்ளே தண்ணி வருது, ஏரியை மூட சொல்லி எங்க வீட்டுல இருக்குற நாலு பேரு எத்தனையோ போராட்டம் பண்ணிட்டோம்.. ஒண்ணும் பிரயோஜனம் இல்லே... கவர்ன்மெண்ட் எங்களுக்கு ஏதாச்சும் செய்யனும்..

(மைக் வாங்கிய மற்றொருவர்)
மக்கள் படும் அவஸ்தையை கண்டு கொள்ளாததும் ஒரு அரசா? என்று இவர்கள் கேட்க்கும் கேள்வி விழ வேண்டியவர்கள் காதில் விழுந்தாலே, இவர்களுக்கு விடியல் கிடைக்கும். சன் பீதிகளுக்காக க.கீ.கு.கிறுக்கன்.

மீண்டும் தலைப்புச் செய்திகள்..

குஷ்பூ தமிழ் பெயர் இல்ல்லை - லொல்.வெறிமாவளவன் கடும்தாக்கூ.........

Thursday, November 17, 2005

பைத்தியக்காரன்

*****
எத்தனை முறை எடுத்து சொல்லியும்
அது கேட்க வில்லை - போய் தொலை
என்று விட்ட பின் வலிக்கிறது...!
மன வெறுமையில் இருள்..!
அது இருந்தவரை நான் "நான்",
அது இல்லாத போது நான் "வீண்"!
அது.. என் இதயம்...!

எடுத்து கொண்டு சென்றவள்,
ஒரு நன்றி கெட்டவள் !
என்னை கொன்று விட்டவள் !
மனம்திண்ணி கழுகாய் சுற்றி வந்தவள்!
செத்த பின் தனியே விட்டு சென்றவள்!
அவள் என் காதலி!!

அவள் வீசி விட்டு சென்ற பின்
வீதியிலே கிடந்த என் இதயத்தை
நாய் வந்து கவ்வி சென்றது!
அதை துரத்தும் என்னை
"பைத்தியக்காரன்..." - என்று
ஊர் துரத்துகிறது!....
மொட்டை மாடியில், அவள்
யாரோ ஒருவனின் முத்தத்தில்!!
*****
எழுத எதுவும் தோணலே.. அதான் இப்படி ஆயிட்டேன்

Tuesday, November 15, 2005

செக்ஸ் பட போஸ்டர்

இன்று ரேடியோ மிர்ச்சி சுசி பேச்சில் ஒரு சுவாரஸியமான விஷயம் கிடைத்தது. நாம் வளர்க்கும் வீட்டு பிராணிகளுக்கு நம்மை போல பழக்க வழக்கம் வருகிறதாம். அதாவது தட்டில் சாப்பிடுவது, கழிவறை உபயோகிப்பது என்பது போல.

அதே போல் மனிதருக்கும், மாடுகளின் குணாதிசயங்கள் இருக்கிறதாம். யாரிடமும் வாய் விட்டு பேசாமல், வாயில் ஒரு பபிள்கம் போட்டுக் கொண்டு, எப்பொழுதுமே அசை போடுவது, எதற்கெடுத்தாலும் மண்டையை ஆட்டுவது, சுவற்றில் செக்ஸ் பட போஸ்டரை விழுங்கி விடுவது போல் பார்ப்பது ( மாடு அதை தின்ன பார்க்குது.. மனுசன் தின்னுடுற மாதிரி பார்க்குறது- அவ்வளவு தான் வித்தியாசம்.) அப்புறம் மாடு மாதிரி புண்ணாக்கு திங்குறது.

யோவ் என்ன உளர்றே? மனுசன் எங்கே புண்ணாக்கு திங்குறான்?னு கேக்குறீங்களா? சரவண பவன், சங்கீதா, வசந்த பவன், முருகன் இட்லி கடை இப்படி எங்கே போனாலும், இட்லி, தோசை கூட, சும்மா ரின்,ஏரியல், சர்ப் போட்டு, உஜாலாவில வெளுத்த மாதிரி ஒரு தேங்காய் சட்னி வைப்பாங்களே, ஞாபகம் வருதா? அது தான் புண்ணாக்கு சட்னி..சாதா புண்ணாக்கு இல்லே.... தேங்கா புண்ணாக்கு சட்னி.. நாமளும், ஒண்ணுக்கு ரெண்டு கிண்ணம் வாங்கி, அதுல தோய்ச்சி எடுத்து சாப்பிடுவோம்.. ம் ம் ம்... நல்லாதான் இருக்கும். ஆனா தொடர்ந்து சாப்பிட்டா வயித்துக்கு ஆகாதுப்பா.. அவ்வளவு தான்..

தலைப்புக்கும், மேட்டருக்கும் சம்மந்தம் ஒண்ணும் இல்ல.. தலைப்பு ச்ச்சும்மா...

Monday, November 14, 2005

யார் என்ன நினைக்கிறாங்க?

குஷ்பூ: வாய்(ஸ்) குடுப்பாள் தோழி

சுஹாசினி: வேலியில போற ஓணானை எடுத்து சேலைக்குள்ள விட்டுக்கிட்டேன் போல

திருமாவளவன்: வந்த சண்டை விடமாட்டேன், வ(கொ)ம்பு சண்டையையும் விடமாட்டேன்.

கிருஷ்ணசாமி: பக்கத்து(திருமா) இலைக்கே பாயாசம் போகுதே?

ராமதாஸ்: தம்பி(திருமா) உடையான் ப(பா)டைக்கு அஞ்சான்.

கருணாநிதி: தேனை எடுக்கும் பேரன், ஒழுங்கா புறங்கை நக்குறானா?

ஜெயலலிதா: யானைக்கும் அடி சறுக்குமோ?

அபுசலீம்: வினை விதைச்சா தினை விளையாதா?

நட்வர்சிங்: எள்ளுன்னா எண்ணையா வந்து நிக்குதே?

வோல்கர் அறிக்கை : தண்ணியில நின்னு குசு விட்டாலும் வெளியே தெரியும்

Sunday, November 13, 2005

இது தப்பு

"தப்பு" என்று என் வலைபதிவினை பெயர்மாற்றம் செய்து இருக்கிறேன். காரணம்
1. ஞானதேவன் என்ற பெயர், வலையில் தேட கடினமாக இருக்கும்
2. சுலபத்தில் மறந்து விட கூடிய பெயர்.
3. உச்சரிக்க கடினம்
எல்லாவற்றுக்கும் மேல் பெயருக்கு தகுந்த மாதிரி எதுவும் இல்லை ;-) அதனால் தான் அடிக்கடி செய்வதையே வலைபதிவின் தலைப்பாக்கி விட்டேன்.

இனி தப்பு தப்பாய் எழுத வேண்டியது தான்.

Thursday, November 10, 2005

வாழ்க சீ சீ சீ

பொழுது போகாமல் அலுவலகத்தில் இருந்த போது ஒரு புண்ணியவான் வைத்திருந்த திருட்டு இந்தி சிடி கிடைத்தது. படம் பேர் "ஆஷிக் பனாயா ஆப்னே".. . கதை ஒன்றும் புதிதல்ல.

ஒரு கல்லூரி, ஒரு பையன், ஒரு பொண்ணு. பையனுக்கு பொண்ணு மேல ஒரு கண்ணு. பொண்ணுக்கு பையனோட நண்பன் மேல லவ்வு. பையன் லவ்வை கெடுக்குறான். நண்பனை ஜெயிலுக்கு அனுப்புறான். கடைசிலே அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கும் போது, நண்பன் வந்து உண்மையை உடைச்சி...சீ சீ சீ.. இதெல்லாம் ஒரு கதைன்னு சொல்லி 3 மணி நேரம் ரீல் ஓட்டுறாங்கப்பா...

சரி விஷயத்துக்கு வர்றேன். படத்துல ஒரு பாட்டு வருது.. சிச்சுவேஷன் சாங்..
ஹீரோ: என்னை உண்மையா காதலிக்கிறியா?
ஹீரோயின்: ம்
ஹிரோ: காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வியா?
ஹீரோயின்: ம்ஹீரோ: அப்போ உன் டாப்ஸை கழட்டு
ஹீரோயின்:என்ன?
ஹீரோ: உன் டாப்ஸை கழட்டுனு சொன்னேன்

ஹீரோயின் கழட்டும் போது..தடுத்து... கட்டி பிடித்து..
"எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்குறேன்" என்று சொல்லிட்டு போயிடறான்..

ஹீரோயின்க்கு தாங்க முடியலே...
பின்னாடியே போய் அவனை கூட்டிகிட்டு வந்து... வரும் போது மாடிபடியிலேயே சாங் ஆரம்பிச்சி..

ஹாலிவுட் முத்தம் (அட நம்ம கமல்ஹாசன் குடுப்பாரே அதான்) குடுத்து.. பாட்டுல ஒவ்வொரு அடிக்கும் ஒரு டிரஸ் வீதமா கழட்டி போட்டு..
2வது சரணம் பாடும் போது 98% நிர்வாணமா படுத்துகிட்டு,
முகத்துல காம ரசத்தை கொட்டி அதுல நம்மை சூடேத்தி...
ஹீரோவோட ஒரே போர்வைக்குள்ள...

அவ்வளவு தான் சொல்ல முடியும்.. மீதியை நீங்களே VCD/DVD வாங்கி பார்த்துகங்கப்பா... சொல்ல மறந்துட்டேன்... இது ஏ படம் இல்லை.. தைரியமா வாங்கி பார்க்கலாம்.

எதுக்கு இதை எழுத ஆரம்பிசேன்??? ஆங்... ஞாபகம் வந்துடிச்சி..
இந்த இந்திய கலாசாரம் இருக்கே.....
பண்பாடு இருக்கே.....
அதெல்லாம்இப்போதைக்கு இருக்கு(?)...
இந்த படம் எல்லாம் பார்த்தா...
இந்திய கலாசாரம் சீக்கிரமே ஹிஸ்டரி ஆயிடும் போலவும் இருக்கு...
வாழ்க ஜனநாயகம்!!!

Wednesday, November 09, 2005

யாரை குற்றம் சொல்ல?

கோபம் கொண்ட இயற்கை சீறி விழுகிறது. நிஜமாகவே தமிழகம் தத்தளிக்கிறது. நான் சென்னையில் இருந்தாலும், சொந்த ஊர் சேலமும், பிறந்த ஊர் திருச்சியும் மூழ்கி போவதை பற்றி அறிந்து நொந்து போகிறேன். என் சொந்தங்கள் காவேரி பக்கம் தானே வாழ்கின்றனர். காவேரியில் குதித்து குளித்தவன் தானே நானும். அப்போதெல்லாமும் மழை பெய்யும், தொடர்ந்து 2,3 நாட்கள். சுழித்து ஓடும் ஆற்றைக் கண்டு மலைத்து நின்று ரசித்திருக்கிறேன். இப்போது அதை எல்லாம் மீறி.. கரை தாண்டி வந்துவிட்ட காவிரி அன்னையை என்ன சொல்லி கடிந்து கொள்ள? அவள் எத்தனை கொடுத்தாள்? அத்தனையையும் திருப்பி கேட்கிறாளோ என்று பயமாய் இருக்கிறது.

தினமும் காலை மாலை ஊரிலிருந்து போன் வந்து விடும், "நல்லா இருக்கியா நீ? மழை எப்படி அங்கே? தண்ணி இல்லையே? சன் நியூஸ் பார்த்து பயந்துட்டோம்".. எனக்கும் இதே நிலை தான் எப்போதெல்லாம் சன் நியூஸ் பார்கிறேனோ அப்போதெல்லாம் பயம் வந்து விடும்.. வர வர சன் நியூஸ் "ஷாக் நியூஸ்" ஆகி விட்டது. உள்ளதை உள்ளபடி காட்டாமல், அதிகப்படுத்தி காட்டும் அதன் போக்கு வருந்தத்தக்கது. தொடர்ந்து 1 வாரம் அதை பார்த்தால் மனசிதைவு நோய் வர வாய்ப்பிருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஒரு வசனம் வரும், ஒரு டிவி கம்பெனி நடத்தி வரும் வில்லன் சொல்வான் "கெட்ட செய்தியை போல் நல்ல செய்தி எதுவும் இல்லை" என்று. அதை அப்படியே பின்பற்றுபவர்களில் முதலிடம் சன் நியூஸ்க்கு குடுக்கலாம்.

டிசம்பர் 26 ல் இருந்து இன்று வரை சுனாமி என்ற வார்த்தையை உபயோகிக்காமல் அவர்கள் செய்தி வாசித்ததில்லை. கின்னஸ்க்கு அனுப்பி வைக்கலாம்.

சின்ன விஷயத்தையும், பீடிகை போட்டு, பெரிது படுத்தி..
சீரங்கம் மூழ்கியது..
சென்னை தீவானது...
மக்கள் பீதி, பேதி, பதற்றம்..
என்று முழக்கமிட்டு பலரின் கண்களில் கவலையை குடி அமர்த்துகிறார்கள். இதை இதுவரை யாரும் கண்டிக்காதது எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக தான் இருக்கிறது.

யாரை குற்றம் சொல்ல?

Monday, November 07, 2005

ஒரு குரங்கின் அனுபவம்

நான் ஒரு குரங்கு. மாருதி என்றும் சொல்வார்கள். சென்னையிலிருந்து சேலம் நோக்கி புறப்பட்டேன். திண்டிவனம் வரை வெண்ணையில் வைத்த கத்தி போல் சென்ற நான், திண்டிவனம் தாண்டியதும் திண்டாடிவிட்டேன் :-( நிஜமாகவே ஏதோ வனத்தில் போவது போல தான் இருந்தது. சிறிது நேரம் வீடியோ கேம் விளையாடுவது போல், இப்படியும் அப்படியும் வளைந்து ஒடிந்து திரும்பி ரோட்டில் எல்லாப்பக்கமும் சடுகுடு ஆடுவது போல் சென்றேன். ஒரு பள்ளத்தை தவிர்க்கப் பார்த்து பல குழிகளில் விழுந்து, நொண்டி, லொடுக்கு லொடுக்கு என்று ஒரு பயணம். கை,கால் வலித்த பிறகு அத்தனை ஆட்டத்தையும் விட்டு இதுதான் சாஸ்வதம் என்று பொறுமையாய் பள்ளம் பார்த்து நேராய் ஓடினேன். 200 கி.மீ தூரத்தை 7 மணிநேரம் எடுத்து கடந்தேன். சேலத்தை அடைந்ததும் பார்த்தால், என் உடல் மொத்தமும் ஆட்டம் கண்டு, சேற்றில் குளித்து களித்த வராகம் போல் இருந்தது.

இதில் வியப்பதற்க்கு என்ன இருக்கு குரங்கே என்று கேட்கலாம். இருக்கிறதே.... ஆத்தூர் ஆத்தூர் என்று ஒரு ஊர். அங்கிருந்து சேலம் செல்ல
7 மலை,
7 கடல்,
7 குளம்,
7 கால்வாய்,
7 ஏரி,
7 கிணறு மற்றும்
7*7*7*7..... பள்ளங்கள் கடந்து தான் செல்ல வேண்டும். மன்னிக்க கடந்து அல்ல, தாண்டி செல்ல வேண்டும். நானோ சின்ன குரங்கு.. என்ன செய்வேன். ரொம்ப கஷ்டப்பட்டேன். இதில் இந்த ஞானதேவன் அவன் குடும்பத்தோடு என் முதுகில் அமர்ந்து கொண்டு, விடாமல் விரட்டிக்கொண்டிருந்தான். "என்னத்த திண்ணுட்டு இப்படி வளர்ந்தானோ?" என்று முனகிக் கொண்டே ஓடினேன், ஓடினேன், சேலம் வரை ஓடினேன்.

இதனால் சக குரங்குகளுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், தயவு செய்து ஆத்தூர் பக்கம் செல்வதாய் இருந்தால்..."செல்லாதீர்கள்"