தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Sunday, May 21, 2006

"விட்டுது சிகப்பு"

"விட்டுது சிகப்பு" அற்புதமாக எழுதுகிறார். கோபமாக வந்து பந்து வீசும் சோயப் அக்தரின் பந்துக்களை பொறுமையாக பவுண்டரிக்கு திருப்பும் டெண்டுல்கர் போல், பல சூடான விசயங்களை கேலியாக கையாள்கிறார். நக்கலும் நையாண்டியும் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல் இருக்கிறது.

அவருடைய பதிவுகளில் அர்த்தம் இல்லாமல் இல்லை. இது பலரை சீண்டி பார்க்கவும் செய்கிறது மறுப்பதற்கில்லை. ஆனாலும் அவரின் வாதங்களில் சில நியாயங்கள் இருக்கிறது. அவர் யார் சார்பாக எழுதுகிறார் என்று தெரிகிறது. பலமுனைகளில் தாக்குதல் பெற்று வரும் ஒரு சாராருக்கு அவரின் பதிவுகள் ஒரு ஆதரவாய் இருக்கும்.

"விட்டுது சிகப்பு" யார் என்றே எனக்கு தெரியாது. அவர் சொல்வதை ரசிக்கிறேன். அவரது பதிவுகள் எனக்கு பிடிக்கிறது. முக்கியமாய் நான் பிறப்பால் தமிழன் இல்லை. விட்டுது சிகப்புவின் ஆதரவு பெற்ற அணியிலும் இல்லை. பதிவுலகில் சில காலமாய் நடந்து வரும் "ஒரு சாரார்" தாக்குதலை படித்து சற்று கவலை அடைந்திருந்தேன். அவர்களுக்கு சரியான பதிலாய் இவர் எழுதுகிறார்.

யார் பதிவுக்கும் நான் இப்படி ஒரு ஆதரவு பதிவு எழுதியதில்லை. இவருக்கு எழுத வேண்டும் போல் தோன்றியது. எழுதுகிறேன். மற்றபடி நான் எந்த அணியிலும் இல்லை.

பின்னெச்சரிக்கை:
விட்டுது சிகப்பு அவர்களே, எனக்கு உங்கள் ஆட்சியில்(ஆப்பில்) பங்கு வேண்டாம். நான் வெளியில் இருந்து உங்களுக்கு ஆதரவு தருகிறேன்.

6 Comments:

  • At Mon May 22, 08:53:00 PM EDT, Blogger VSK said…

    வேண்டம்! வேண்டாம்!
    எப்போது கூட்டணியில் சேர்ந்தீர்களோ, அப்போதே
    உங்களுக்கும் ஆட்சியில் பங்குண்டு!
    மறுக்காமல்,
    அமைச்சர் பொறுப்பினை ஏற்றிடுமாறு
    மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்!
    அப்புறம், வித்தியாசம் தெரியாமல் போய் விடுமே!!
    :))))))))))))))

     
  • At Tue May 23, 03:51:00 AM EDT, Blogger ரவி said…

    ம்ம்ம்....ஆட்டோ வந்தால் பின்வாசல் திறந்து வெளியேறும் வித்தை தெரியும் தானே உமக்கு...:))

    ரவி

     
  • At Tue May 23, 09:16:00 PM EDT, Blogger Gyanadevan said…

    நன்றி எஸ்.கே .
    சோனியா மாதிரி ஒரு பதவி குடுங்க அது போதும்...

     
  • At Tue May 23, 09:18:00 PM EDT, Blogger Gyanadevan said…

    ரவி.. இப்போ அமெரிக்கா வரை ஆட்டோ வருதா??? அப்படியே வந்தாலும், நீங்க கொஞ்சம் முன்னாடியே சொல்லிடுங்க.. தப்பிக்க வசதியா இருக்கும் ;-)

     
  • At Wed May 24, 06:21:00 AM EDT, Blogger லக்கிலுக் said…

    செம அறுவை....

    ஞானதேவன் நல்லா எழுதுகிறாரா என்ற Poll வைத்திருக்கிறீர்களே... அதை எப்போதாவது Check செய்து பார்ப்பதுண்டா?

     
  • At Wed May 24, 10:05:00 AM EDT, Blogger Gyanadevan said…

    நன்றி லக்கிலுக். எல்லாரும் ஞானதேவன் நல்லா எழுதுறார்ன்னு சொல்லும் வரை எழுதுவதாக உத்தேசம் :-)

     

Post a Comment

<< Home