தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, December 14, 2005

ஆப் கேம்பஸ் இண்டர்வ்யூ - அனுபவம்

2005 வருடம் அண்ணா பல்கலை கழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்று வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை தரும் நோக்கில் எங்கள் கம்பெனி ஆப் கேம்பஸ்(off Campus) இண்டர்வ்யூ(interview) நடத்தியது. மதுரை, சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நடத்தப்பட்ட இந்த மிகப் பெரிய இண்டர்வ்யூ மேளா பெருத்த தோல்வி என்று சொல்லலாம்.

சுமார் 6500 பேர் பங்கு கொண்ட இதில் நாங்கள் தேர்வு செய்தது 140 பேர் மட்டுமே. ஏன்? என்ன காரணம்?
97% மேல் தோல்வி ஏன் ஏற்பட்டது?

- பலரும் ஆப்டிடியுட்("Aptitude") தேர்வை சரியாக செய்யவில்லை

- சாப்ட்வேர் (Software) தொழிலுக்கு வர முக்கிய/அடிப்படை மொழியான C தெரியவில்லை

- ஆங்கிலம் சுமாராகவும் பேச தெரியவில்லை.

- நேர்முக தேர்வுக்கு சரியான உடையில் வரவில்லை

- நேர்முக தேர்வில் திமிராய் பேசி வாய்ப்பிழந்தோர் பலர்.
உதாரணத்திற்க்கு 1
"என்னை நீங்கள் தேர்வு செய்யாவிட்டால், உங்களுக்கு குற்ற உணர்வு ஏற்படுமா?"

- நெகிழ்வுதன்மை(flexibility) இல்லாமை.
அதாவது நான் சென்னையில் தான் இருப்பேன்.. அமெரிக்கா மட்டும் தான் போவேன். ஜாவாவில் மட்டுமே வேலை செய்வேன். என்று சொல்வது.

- தேவை இல்லாமல் அது தெரியும் இது தெரியும் என்று சொல்லிவிட்டு கேள்வி கேட்கும் போது அசடு வழிவது.

- குடும்ப கஷ்டம் சொல்லி வேலை கேட்ப்பது

- கம்பெனியின் யாராவது பெரிய மனிதரின் பேரை சொல்லி அவரின் சிபாரிசு என்பது. அது உண்மையாக இருந்தாலும், திறமை இல்லாவிட்டால் எடுக்க மாட்டோம் என்பது தான் உண்மை. அப்படி ஒருவரின் சிபாரிசு இருப்பதால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது.

- அடிப்படை கேள்விகளில் ஒரு சிறு முயற்சி கூட இல்லாமல் தெரியாது என்று சொல்வது.

- விடை தவறாக இருந்தாலும் பரவாயில்லை அதை எப்படி அடைவது என்கிற அப்ரோச்(approach) கூட தெரியாமல் இருப்பது.

- முக்கியமாய், படித்த 4 வருடத்தில் 5க்கும் அதிகமான அரியர் வைத்திருந்தது.

இக்காரணங்களால் தான் இந்த மாபெரும் தோல்வி எங்களுக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும், 20 முதல் 30 பேருக்கு ரயில் முதல் வகுப்பு டிக்கெட் எடுத்து, நல்ல ஓட்டலில் தங்க வைத்து பெரும் பணம் செலவு செய்து ஒன்றுமே தேறவில்லை என்றால்.. தமிழகத்தில் அடுத்த வருடம் ஆப் கேம்பஸ் என்று ஒன்று நடத்தவே போவதில்லை என்று எங்கள் தலைவர்கள் பேசி கொண்டனர். இது இப்படியே எல்லா கம்பெனிகளுக்கும் பரவினால், பிறகு காலேஜ் முடித்து வெளியே வந்து விட்டால் நல்ல வேலை கிடைப்பது நிஜமாகவே குதிரை கொம்பு ஆகிவிடும்.

எனவே வேலை இல்லாத இளைஞர்களே,
- சுமாராக ஆங்கிலம் பேச கற்கவும்

- உங்களின் "வேலை தேடல் படலத்தில்" அடைந்த வெறுப்பை நேர்முக தேர்வில் காட்டாதீர்கள். நஷ்டம் உஙகளுக்கு தான்.

- சோகம் எவ்வளவு இருந்தாலும், சிரிக்க பழகுங்கள்

- வறுமை வாட்டினாலும், தலை வாரி, துவைத்த, சுருக்கம் இல்லா சட்டை அணிந்து வாருங்கள். தயவு செய்து கோணிதுணி (ஜீன்ஸ்) பேண்ட் வேண்டாம்

- நம்பிக்கையுடன் பேச பழகுங்கள்

- போலியான உற்சாகத்தையாவது முகத்தில் காட்டுங்கள்.

- ஏன் இத்தனை நாள் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று கேட்டால், "அந்த கம்பெனிகளுக்கு அதிர்ஷ்டம் இல்லை" என்று அகம்பாவ பதில் வேண்டாம்.

- எல்லாவற்றையும் விட முக்கியமானது...உங்களுக்கு தெரிந்ததை மட்டும் உங்களின் ரெஷ்யூமே'வில்(Resume) போடுங்கள். தெரியாதவற்றை போட்டு எதிர்பார்ப்பை வளர்த்து, பிறகு கேள்வி கேட்கும் போது ம்ஹூம் என்று உதட்டை பிதுக்க வேண்டாம்.

4 Comments:

  • At Wed Dec 14, 07:30:00 AM EST, Anonymous Anonymous said…

    நல்ல பயனுள்ள தகவல்கள். நிஜமாகவே பலருக்கும் பயன்படும்.

    ஆமாம், நீங்க ஏன் எப்பொழுதாவது ஒரு முறைதான் வலைப்பதியறீங்க ஏன்? அடிக்கடி 1, 2, 3, abcdன்னாவது ஏதாவது போடக்கூடாதா? :-)

     
  • At Wed Dec 14, 09:30:00 AM EST, Blogger மகேஸ் said…

    நல்ல தகவல்கள். படிக்கும்பொது சிறிய project செய்வது நல்லது. இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே இதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டும்.

     
  • At Wed Dec 14, 02:07:00 PM EST, Blogger காயத்ரி said…

    Very useful information. I fwded ur post to my students.

     
  • At Sat Sep 02, 02:29:00 PM EDT, Anonymous Anonymous said…

    வெட்டிப்பயல் அவர்களின் 'சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-4!!!' என்னும் பதிவை வாசிக்கையில் உங்களின் பின்னூட்டம் கண்டேன். உங்கள் வலைப்பூவிற்க்கு சென்று வாசித்தேன். மிகவும் அருமை. பலருக்கும் பயனளிக்கும் பதிவு. வலைப்பதிவுகளால் என்ன பயன் என்று கேட்ப்பவர்களுக்கு இது போன்ற பதிவுகளே பதிலாய் அமையும். மேலும் தொடருங்கள். நன்றி.

    ஜகன்

     

Post a Comment

<< Home