தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Monday, November 07, 2005

ஒரு குரங்கின் அனுபவம்

நான் ஒரு குரங்கு. மாருதி என்றும் சொல்வார்கள். சென்னையிலிருந்து சேலம் நோக்கி புறப்பட்டேன். திண்டிவனம் வரை வெண்ணையில் வைத்த கத்தி போல் சென்ற நான், திண்டிவனம் தாண்டியதும் திண்டாடிவிட்டேன் :-( நிஜமாகவே ஏதோ வனத்தில் போவது போல தான் இருந்தது. சிறிது நேரம் வீடியோ கேம் விளையாடுவது போல், இப்படியும் அப்படியும் வளைந்து ஒடிந்து திரும்பி ரோட்டில் எல்லாப்பக்கமும் சடுகுடு ஆடுவது போல் சென்றேன். ஒரு பள்ளத்தை தவிர்க்கப் பார்த்து பல குழிகளில் விழுந்து, நொண்டி, லொடுக்கு லொடுக்கு என்று ஒரு பயணம். கை,கால் வலித்த பிறகு அத்தனை ஆட்டத்தையும் விட்டு இதுதான் சாஸ்வதம் என்று பொறுமையாய் பள்ளம் பார்த்து நேராய் ஓடினேன். 200 கி.மீ தூரத்தை 7 மணிநேரம் எடுத்து கடந்தேன். சேலத்தை அடைந்ததும் பார்த்தால், என் உடல் மொத்தமும் ஆட்டம் கண்டு, சேற்றில் குளித்து களித்த வராகம் போல் இருந்தது.

இதில் வியப்பதற்க்கு என்ன இருக்கு குரங்கே என்று கேட்கலாம். இருக்கிறதே.... ஆத்தூர் ஆத்தூர் என்று ஒரு ஊர். அங்கிருந்து சேலம் செல்ல
7 மலை,
7 கடல்,
7 குளம்,
7 கால்வாய்,
7 ஏரி,
7 கிணறு மற்றும்
7*7*7*7..... பள்ளங்கள் கடந்து தான் செல்ல வேண்டும். மன்னிக்க கடந்து அல்ல, தாண்டி செல்ல வேண்டும். நானோ சின்ன குரங்கு.. என்ன செய்வேன். ரொம்ப கஷ்டப்பட்டேன். இதில் இந்த ஞானதேவன் அவன் குடும்பத்தோடு என் முதுகில் அமர்ந்து கொண்டு, விடாமல் விரட்டிக்கொண்டிருந்தான். "என்னத்த திண்ணுட்டு இப்படி வளர்ந்தானோ?" என்று முனகிக் கொண்டே ஓடினேன், ஓடினேன், சேலம் வரை ஓடினேன்.

இதனால் சக குரங்குகளுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், தயவு செய்து ஆத்தூர் பக்கம் செல்வதாய் இருந்தால்..."செல்லாதீர்கள்"

2 Comments:

  • At Mon Nov 07, 08:19:00 PM EST, Anonymous Anonymous said…

    அடேங்கப்பா... எவ்வளவு நாட்கள் கழித்து உங்களைப் பார்க்கிறேன்...!!

    நல்லாருக்கீங்களா?

     
  • At Tue Nov 08, 12:43:00 PM EST, Blogger Gyanadevan said…

    நான் பயந்த மாதிரியே ஆகிவிட்டது. இந்தியா வந்ததும் வலை பதிவின் பக்கம் வர முடியாது போய் விட்டது. மழை வந்ததோ இல்லையோ விடுமுறை விட்டார்கள் வலைபதிவின் பக்கம் ஓடி வந்து விட்டேன்.:-))

     

Post a Comment

<< Home