தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Tuesday, December 07, 2004

சில குறிப்புகள்

லண்டனில் இருந்து திரும்பிய என்னை, இங்கே சென்னை அலுவலகத்தில் மேலாளர் பதவியில் அமர வைத்து விட்டனர். அதாவது செயல் அடிப்படையில்(Role based) நான் மேலாளர். பிறகு நீண்ட கால employee என்பதால் என்னை நேர்முக தேர்வு குழுவிலும் உறுப்பினராக்கி விட்டனர். தினமும் குறைந்தது இருவரை நான் நேர்முக தேர்வு செய்கிறேன். அதில் நான் கவனித்தவற்றை தருகிறேன்.

சில அடிப்படை தவறுகளை பலரும் செய்கின்றனர். அதை மிக சுலபமாக தவிர்க்கலாம். அனுபவசாலிகளை தான் நான் நேர்முக தேர்வில் சந்திப்பதால் புதிதாய் வேலை தேடுபவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை.2 அல்லது 3 வருடம் அனுபவம் கொண்டவர்கள் செய்யும் சில தவறுகள்.

- கேட்கப்படும் கேள்விகளுக்கு சுற்றி வளைத்து பதில் தருவது.. பல நேரங்களில் பதில் தப்பாக புரிந்து கொள்ளப்படும். பதில்கள் சுற்றி வளைக்காமல் தெளிவாக சுருக்கமாக இருக்க வேண்டும். நேரத்தை வீணாக்குபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

- அடிப்படை கேள்விகளில் சறுக்குவது. அதாவது அவர் சம்மந்தப்பட்ட துறையில் மிக சுலபமான, அடிப்படை கேள்விக்கு தவறாக பதில் சொல்வது. காரணம் - தெரியாது என்று சொல்ல முடியாததால்.

- சூழ்நிலையின் (real time situation) அடிப்படையில் கேள்வி கேட்கும் போது தரப்படும் பதில் தான் ஒருவரை தேர்வில் வெற்றி பெற செய்கிறது.

- யோசிக்காமல் விடை அளிப்பதை தவிர்க்க வேண்டும். 1 முதல் 2 நிமிடம் வரை யோசிக்க அவகாசம் கேட்கலாம் தப்பில்லை, ஆனால் எல்லா கேள்விகளுக்கும் அதே போல் கேட்க கூடாது.

-பேசும் போது தேர்வாளரை பார்த்து பேசுவது நல்லது

- தெரியாதவற்றை அல்லது மறந்ததை மறைக்காமல் சொல்லி விடுவது உத்தமம்

- பயோ டேட்டாவில் இருந்து தான் கேள்விகள் கேட்பார்கள். எனவே அதை மற்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருப்பவற்றை நன்கு படித்து வைத்து இருப்பது நல்லது.

மேலும் சிலவற்றை தொகுத்து சொல்கிறேன்....

2 Comments:

  • At Tue Dec 07, 05:55:00 PM EST, Anonymous Anonymous said…

    அப்பாடி! ஜாதி, அரசியல்ன்னு யாருக்குமே பயனில்லாத 'சமூகப் பார்வை' தவிர்த்து படிக்கறவங்கள்ள யாராவது ஒர்த்தருக்காவது பயன்படற மாதிரி எழுதறீங்களே, ரொம்ப சந்தோஷம். கங்க்ராட்ஸ்!

    க்ருபா

     
  • At Tue Aug 22, 08:57:00 AM EDT, Blogger கார்த்திக் பிரபு said…

    may i no in which companu you are working?

     

Post a Comment

<< Home