சரக்கு வச்சிருக்கேன்
இந்தியாவில் ஊழல் பெருகி கிடக்க பல காரணங்களை சொல்லலாம். எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம். மிக மிக சிக்கலான நடைமுறைகளும், விதிமுறைகளும் தான்.
உதாரணத்திற்க்கு, லண்டனில் இருந்து சுமார் 50 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டியை சரக்கு விமானம் மூலம் தனியாக அனுப்பினேன். அப்படி அனுப்ப எனக்கு 150 பவுண்டுகள் அங்கே செலவானது. பிறகு நான் சென்னை வந்ததும், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு கூரியர் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஒரு டாடா சுமோ வண்டியை வாடகைக்கு அமர்த்தி அங்கே போனேன். "Delivery order" என்ற ஒரு காகிததை தந்து 1600 ரூபாய் என்னிடம் வசூலித்தார்கள். கேட்டதற்கு அந்த கட்டணம் இந்த கட்டணம் என்று ஏதேதோ புது புது பேர்களை சொல்லி நன்றாக தலையில் மிளகாய் அரைத்தார்கள். சரி பெட்டி எங்கே என்று கேட்டதற்க்கு, நான் தான் சரக்ககம் சென்று கஸ்டம்ஸ் அதிகாரிகளை சந்தித்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.
அங்கே போனால் வாசலில் இருந்தே புரோக்கர்களும், ஏஜென்டுகளும், காரை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அவர்களை எல்லாம் தாண்டி சென்று நானே என் சொந்த முயர்சியில் செய்யலாம் என்று இறங்கினேன். அந்தோ பரிதாபம், எங்கே ஆரம்பிப்பது என்று கூட தெரியவில்லை. கடைசியில் ஒரு ஏஜென்ட் விரித்த வலையில் சிக்கினேன். கதை இங்கே தான் ஆரம்பம்.
1. எடுத்தவுடன் வாசலில் இருந்த ஒரு பெரிய நோட்டு புத்தகத்தில் என் பெயர் விலாசம் ஆகியவற்றை எழுதி கையொப்பமிட்டேன். என் கூட வந்த ஏஜென்டின் பேரும் அதில் இடம் பெற்றது. அவர் ஒரு ரசீதை குடுத்தார். அதை பத்திரமாக பெட்டியை, வெளியே கொண்டு செல்லும் வரை வைத்திருக்கவும் என்றார்.
2 இப்போது உள்ளே வந்து விட்டென். ஒரு பெரிய அறை, நடுவில் உட்காரும் வசதி இருந்தது. சுற்றிலும் பலவகை பெயர்கள் கொண்ட கவுண்டர்கள் இருந்தது. சுவற்றில் பெரியதாக சுமார் 10 படிகள் கொண்ட நடை முறை விளக்கப்படம் இருந்தது. அதாவது அதை படித்து புரிந்துக் கொண்டு நடந்தால், நாமே நம் பெட்டியை வெளியே கொண்டு வந்து விடலாமாம். படித்துப் பார்த்தேன், சத்தியமாய் ஒன்றும் புரியவில்லை.
3. இந்த நேரம் ஏஜென்ட் ஒரு படிவத்தை கொண்டு வந்தார், அந்த பெட்டியில் என்ன இருக்கிறது அதை மதிப்பு என்ன என்று கேட்டர். நானும் குத்து மதிப்பாக சொல்ல, அவர் அதில் பாதியை மட்டும் எழுதிக் கொண்டார்.
4. நேராக உள்ளே சென்று, கண்ணாடி அணிந்து இருந்த ஒரு அதிகாரியிடம் கையொப்பம் வாங்கினார்
5. பிறகு வெளியே (பெரிய அறை) வந்து ஒரு கவுண்டர் சென்று 60 ரூபாய்க்கு ஏதோ எண்ட்ரி போட்டார். என்னிடம் 500 ரூபாய் குடுக்க சொன்னார். குடுத்தேன்.
6. பக்கத்து கவுண்டரில் ஒரு கையொப்பம் வாங்கினார்
7. உள்ளே போனார், அவ்வளவு தான். சிறிது நேரம் வெளியே வரவே இல்லை.
8. திடீரென்று கை நிறைய காகிதங்களுடன் வந்தார், 2 இடத்தில் என் கையொப்பம் வாங்கினார். உள்ளே போய்விட்டார்.
9. பிறகு வெளியே வந்து, என்னையும் உள்ளே அழைத்துக் கொண்டுப் போய், பெட்டியை தேட சொன்னார்.
10. நான் தேடி கொடுத்ததும் அதை 3 சக்கர வாகனத்தில் வைத்து ஏற்றி ஸ்கேன் செய்யும் இடத்திற்க்கு கொண்டு வந்தார்.
11. சுமார் 15 நிமிடம் நான் அங்கே காத்திருந்தேன்.
12. திடீரென வந்து, அதிகாரி வந்துவிட்டார் வாங்க என்று உள்ளே கூட்டிப்போனார்.
13. அதிகாரி ஸ்கேன் செய்து விட்டு 400ரூபாய்க்கு ஒரு பில் குடுத்தார்
14. அதை கொன்டு போய் அங்கே இருந்த பேங்கில் கட்டிவிட்டு, கை நிறைய இன்னும் சில படிவங்களுடன் வந்தார்
15. சார் இது உங்க காபி, இதை வெளியே காட்டணும், இன்னும் ஒரு 500 கேட்டார். அதையும் குடுத்தேன்.
16. போனார், வந்தார், 4 கையெழுத்து கேட்டார். போட்டேன்.
17. 10 நிமிடம் கழித்து, அந்த பெரிய அறையை விட்டு வெளியே வந்தோம். பக்கவாட்டில் ஒரு கிடங்கு போல் இருதது. அங்கே சென்றோம். என் பெட்டி இருந்த 3 சக்கர வாகனத்தை வெளியே இழுத்தார்.
18. அதை செக் செய்ய ஒருத்தரிடம் சிறிது பணம் குடுத்தார்.
19. சிறிது தூரம் வந்ததும் வெளியே கேட்டுக்கு பக்கத்தில் இருந்த முதல் கவுண்டர் சென்றார், பணம் குடுத்தார், கையொப்பம் வாங்கி வந்தார்.
20. இரண்டாவது கவுண்டர் சென்றார், பணம் குடுத்தார், கையொப்பம் வாங்கி வந்தார்.
21. முதலில் நுழைந்ததும், கையொப்பம் போட்ட இடத்திற்க்கு வந்ததும், அங்கேயும் பணம் குடுத்தார். இப்போது நான் என் பெட்டியுடன் வெளியே வந்து விட்டேன்.
22. மேலும் ஒரு 1500 ரூபாய் கேட்டு அடம் பிடித்தார். சண்டை போட்டு கடைசியில் 1000 ரூபாயில் பேரம் படிந்தது.
இப்போது என் பெட்டியுடன் நான் வெளியே வந்து விட்டேன். மொத்தம் 150 பவுண்டுகள்+1600 ரூபாய் +2000 ரூபாய் செலவழித்தேன்.
சத்தியமாய் எனக்கு புரியவில்லை, உள்ளே என்ன நடந்தது, எதற்கு இத்தனை கையெழுத்துக்கள், இத்தனை விதிமுறைகள், நடைமுறைகள் என்று. பணம் போனாலும், பெட்டி வந்ததே என்று ஆறுதல் பட்டுக்கொண்டேன். ஒன்று மட்டும் புரிந்தது, ஏஜென்ட் மட்டும் இல்லாவிட்டால் என் கதி அதோ கதி ஆகி இருக்கும் என்று.
இனி யாராவது "unaccompanied baggage" அனுப்புவதாய் இருந்தால் சிறிது யோசித்து செய்யுங்கள்.

1 Comments:
At Sun Oct 03, 11:15:00 PM EDT, Anonymous said…
டாடா சுமோவுக்குக்கு எவ்வளவு?
Post a Comment
<< Home