தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Friday, July 28, 2006

இலவச கலர் டிவி

"இலவச கலர் டி.வி வழங்கபட்டவர்களுக்கு அவர்கள் டி.வி பார்க்கும்போது கொறிக்க இலவச 'ஸ்னாக்ஸ்' ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படும் - (தற்போதைய) தமிழ்நாடு முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அறிவிப்பு"

இப்படினு ஏதாவது செய்தி வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை! மாடு தரேன், கயிறு குடுக்க மாட்டேனானு, மொதல்ல இலவச கேபிள், அடுத்தது குடிசைகளுக்கு பல்புக்கும், டி.விக்கும் சேர்த்து இலவச மின்சாரம்னு சொன்னவங்க தானே? அடுத்ததா மேலே சொன்னது நடந்தாலும் நடக்கும்.

ஐயா நீங்க ஏற்கனவே போட்டிருக்கறது பற்றக்குறை பட்ஜெட். இதுக்கு மேலயும் இந்த சுமை எல்லாம் அரசுக்கு தேவை தானா? நாட்டுல பிள்ளைங்கள படிக்க வைக்கவே கஷ்டப்படற எத்தனையோ மக்கள் இருக்காங்க. இந்த டி.வியும் இன்னபிறவும் குடுக்கற காசுல அவங்களை படிக்க வையுங்க, இல்லை இன்னும் நம்ம ஊர் பள்ளி, கல்லூரிகளோட infrastructure டெவலப் பண்ணுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும். அதை விட்டுட்டு இப்படி உங்க கட்சி தேர்தல் அறிக்கைல வந்துடுச்சுங்கற ஒரே காரணத்துக்காக முழுக்க இது மேல தான் கவனம் செலுத்துவேன்னு, அதையும் மக்களோட வரிப்பணத்துல தான் செய்வேன்னு சொன்னா அது என்னங்க நியாயம்?

நம்ம ஊர்ல முன்னேற்ற வேண்டிய, அரசோட கவனம் தேவைபடற விஷயங்கள் எத்தனையோ இருக்கும்போது இந்த ஒரு விஷயத்து மேல இத்தனை அக்கறை தேவைதானா?

இந்த பொண்ணும், தமிழ்நாடும் இப்போ ஒண்ணு. கொஞ்சம் உத்து பாருங்க...

4 Comments:

  • At Fri Jul 28, 12:28:00 PM EDT, Blogger We The People said…

    செவிடம் காதில் சங்கு ஊதுவது போல் உள்ளது உங்கள் பதிவு.

    பள்ளி, கல்லூரியில் நிலை உயர்ந்தால் ஓட்டு கிடைக்குமா?? என்னங்க உங்க லாஜிக். ஐயோ! ஐயோ!! சின்னபுள்ள தனமாவே இருக்கீங்க!

     
  • At Fri Jul 28, 03:55:00 PM EDT, Blogger Gyanadevan said…

    வாங்க ஜெய்..நீங்க சொல்றதும் கரெக்ட் தான். மக்கள் எல்லாரும் படிச்சு நாடு முன்னேறிடுச்சுன்னா இவங்களுக்கு தானே நஷ்டம்? ஆனா கஷ்டப்பட்டு உழைச்சு, சம்பாதிச்சு, ஒழுங்கா வரி கட்டுற மக்கள் எல்லாருக்குமே இப்படி ஒரு அரசாங்கம் நடந்துக்கறது தானே சின்னப்பிள்ளைத்தனமா தோணும்?

     
  • At Sun Aug 20, 09:13:00 PM EDT, Blogger aaradhana said…

    நானும் இலவச T.V.க்கு application போட்டுள்ளேன்..

     
  • At Sun Aug 20, 11:23:00 PM EDT, Blogger Gyanadevan said…

    அப்ளிகேசன் காப்பி எனக்கும் ஒண்ணு அனுப்பி வைங்க :-)

     

Post a Comment

<< Home