வன்முறைவாதிகளுக்கு மட்டும்
முன் குறிப்பு
* இப்பதிவு எந்த ஒரு அப்பாவி இலங்கை தமிழருக்கும் பொருந்தாது. இது வன்முறை மார்க்கத்தை மட்டும் நம்பும் வன்முறைவாதிகளுக்கு மட்டும்.
1. தீவிரவாதிகளுக்கும், புலிகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கிறது. தீவிரவாதிகள் எதிரிகளையும், எதிரியை சார்ந்த மக்களையும் மட்டும் தான் கொல்கிறார்கள், ஆனால் புலிகள், தம்மக்களையும் விட்டு வைப்பதில்லை. அதனால், புலிகளை தீவிரவாதிகளுடனும் கூட ஒப்பிட முடியாது. தீவிரவாதிகளையும் விட மோசம்.
2. மக்களுக்காக போராடுகிறேன் என்று சுடுக்காட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
3. ஏதோ இலங்கையில் மட்டும் தான் பிரச்சினை அதற்க்கு வன்முறை தான் தீர்வு என்று மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு, அவர்களையும் அச்சூழலில் இழுத்து விடுகிறார்கள்.
4. இந்தியாவை சகோதர பூமி என்பவர்கள் என்றால், இந்திய சுதந்திர போராட்டம் எப்படி நடந்தது என்பதை படிக்கலாமே?
5. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்றால் எப்போது போர் முடியும்? இன்னும் எவ்வளவு தான் சண்டை போடுவது என்று யோசிக்க வேண்டாமா? தமிழர் தலைவன் என்ற பதவிக்கு தான் இத்தனை சண்டைகளும் என்று யோசிக்க வைக்கிறது.
6. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு தான் பதில் என்றால் இழப்பு இருவருக்குமே. பிறகு யாரையும் குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை. புலிகளும் குற்றவாளிகளே, சிங்களரும் குற்றவாளிகளே.
7. என் ராஜ்ஜியத்தில் சிப்பாய்களுக்கு மட்டுமே இடம், மக்கள் தேவை இல்லை என்ற மனோபாவம் புலிகளுக்கு மாற வேண்டும். (அகதிகளாக இடம் பெயர்வதையும் இப்போது தடுப்பதாக படித்தேன்)
8. ஏற்கனவே இரண்டு தலைமுறைகளை இழந்து விட்டு, இப்போது மூன்றாவது தலைமுறையையும் முடக்குவது என்று முடிவு செய்து விட்டார்கள்.
9. தங்கள் பாதையை மாற்றி ஆயுதங்களை எறிந்து விட்டு போரடலாம். அப்போது அகதிகளாக யாரும் ஓடி போக மாட்டார்கள். புலிகளுக்கு பக்க பலமாய் இருந்து போராடுவார்கள். உலகநாடுகளின் ஆதரவும் கிடைக்கும்.
10. ஆயுத சண்டையால் சமாதானம் வராது. சத்தமும், ரத்தமும் தான் வரும். முடிவில் பிணம் தின்னும் கழுகுகள் தான் சுதந்திரமாய் வானில் பறக்கும் உண்ட களைப்போடு.
பின் குறிப்பு: ரத்த வெறி பிடித்தவர்களால் தன் இன்னுயிரை இழந்த அப்பாவி தமிழர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரியட்டும்.

11 Comments:
At Sat Jun 24, 04:04:00 PM EDT, Anonymous said…
Nalla Pathivuu.
Sariyakach SonnieerKal.
At Sat Jun 24, 05:12:00 PM EDT, மு. மயூரன் said…
//4. இந்தியாவை சகோதர பூமி என்பவர்கள் என்றால், இந்திய சுதந்திர போராட்டம் எப்படி நடந்தது என்பதை படிக்கலாமே?//
அட இந்தியா எப்பிடீங்க சுதந்திரம் பெற்றது?
காந்தியார் சத்தியாக்கிரகம் பண்ணியா?
சிரிப்புத்தான்
At Sat Jun 24, 05:26:00 PM EDT, Anonymous said…
உங்களை "வெங்காயம்" என்று சொல்ல "தந்தை" பெரியார் இல்லையே என கவலைகொள்கிறேன். :(
அருண்
At Sat Jun 24, 05:38:00 PM EDT, Anonymous said…
ummudaiya kudumpathai unakku munnal oruvan kola ahimsai endu solli kenchuveera
ulakathai patri theriya vidal purinthu kollum
suma elutha vendum enpathatkaka elutha kudathu
At Sat Jun 24, 09:20:00 PM EDT, Anonymous said…
//தீவிரவாதிகளுக்கும், புலிகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கிறது. தீவிரவாதிகள் எதிரிகளையும், எதிரியை சார்ந்த மக்களையும் மட்டும் தான் கொல்கிறார்கள்,//
அப்போ தலைப்பில் குறிப்பிட்ட'வன்முறைவாதிகள்' யார். அவர்களுக்கும் புலிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன வேறுபாடு?
// மக்களுக்காக போராடுகிறேன் என்று சுடுக்காட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.//
ம்... உலக சரித்திரத்தில் உள்ள சுடுகாடுகள் எத்தனை? உலகமகாயுத்தம் 1 & 2, வியட்நாம், கொரிய, தென்னமெரிக்க, பாலஸ்தீன, மத்திய அமெரிக்க விடுதலைப்போர் எல்லாவற்றிலும் சுடுகாடு இல்லையா? இன்றைய ஈராக் யுத்தம் நடத்துவது தீவிரவாதிகளா, வன்முறைவாதிகளா, ஜனநாயகவாதிகளா?
//ஏதோ இலங்கையில் மட்டும் தான் பிரச்சினை அதற்க்கு வன்முறை தான் தீர்வு என்று மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு, அவர்களையும் அச்சூழலில் இழுத்து விடுகிறார்கள்.//
இல்லை இலங்கையில் மட்டும் தான் பிரச்சினை என்று அப்படி ஒருபோதும் சொல்லவில்லை. எங்கே என்று காட்டமுடியுமா?
வன்முறை நாடியது 40 வருட அகிம்சைப்போராட்டத்தின் தோல்வியின் பின்னர்தான்!
//இந்தியாவை சகோதர பூமி என்பவர்கள் என்றால், இந்திய சுதந்திர போராட்டம் எப்படி நடந்தது என்பதை படிக்கலாமே?//
முன்னரே சொல்லி விட்டேன் 40 வருட அகிம்சைப் போரின் தோல்வி பற்றி!
ஆம்! படிக்கமட்டும் செய்யவில்லை அதை நன்கு அறிந்தும் கொண்டோம்.
நீங்கள் அறியவில்லை என்றால் அது அகிம்சைப்போர் எந்தத் தாக்கத்தையும் எற்படுத்தாது என்பதையே காட்டி நிற்கிறது.
மற்றும் இந்தியாவின் அயல்நாடான தீபெத்தில் நடந்த அகிம்சைப் போராட்டத்துக்கு என்ன நடந்தது? மேலும் 'தலே லாமா' பற்றிப் படம் ஒன்றை இந்தியாவில் எடுக்கமுனைந்த மார்ட்டின் ஸ்கொசேசி ஏன் மறுக்கப்பட்டார் என விளக்க முடியுமா?
இன்றைய இந்தியா ஏன் அணுக்குண்டை ஏந்தி நிற்கிறது? அகிம்சையில் நம்பிக்கையின்மையா இல்லை அகிம்சையின் குறைபாடுகள் அறிந்ததனாலா?
//கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்றால் எப்போது போர் முடியும்? இன்னும் எவ்வளவு தான் சண்டை போடுவது என்று யோசிக்க வேண்டாமா? தமிழர் தலைவன் என்ற பதவிக்கு தான் இத்தனை சண்டைகளும் என்று யோசிக்க வைக்கிறது.//
யோசிக்காதீர்கள். உண்மையை அறிய முயலுங்கள். இந்தியாவும் இலங்கை அரசுகளும் (முக்கியமாக சந்திரிகா அரசு) பிரபாகரனுக்கு 10 வருடத்துக்கு வடகிழக்கை கொடுக்க இணங்கியதை அறிவீரா?
//ஒரு தவறுக்கு இன்னொரு தவறு தான் பதில் என்றால் இழப்பு இருவருக்குமே. பிறகு யாரையும் குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை. புலிகளும் குற்றவாளிகளே, சிங்களரும் குற்றவாளிகளே.//
ஆகவே தமிழர்கள் என்ன செய்யலாம் என்கிறீர்கள்?
//என் ராஜ்ஜியத்தில் சிப்பாய்களுக்கு மட்டுமே இடம், மக்கள் தேவை இல்லை என்ற மனோபாவம் புலிகளுக்கு மாற வேண்டும். (அகதிகளாக இடம் பெயர்வதையும் இப்போது தடுப்பதாக படித்தேன்)//
எங்கே படித்தீர்? பீ.பீ.சி யில் வந்த நேர்காணலில் அகதியாக வந்தவர்களும் வரமுயற்சிப்பவர்களும் ஸ்ரீலங்கா கடற்படையை அல்லவா தடை போடுவதாகக் கூறினார்கள்! கேட்கவில்லைப்போலும்!
//ஏற்கனவே இரண்டு தலைமுறைகளை இழந்து விட்டு, இப்போது மூன்றாவது தலைமுறையையும் முடக்குவது என்று முடிவு செய்து விட்டார்கள்.//
யார் இரண்டு தலை முறைகளை இழப்பதற்கு காரணமானவர்கள்? அகிம்சையில் நம்பிக்கை கொண்டவர்களில்லையா?
//தங்கள் பாதையை மாற்றி ஆயுதங்களை எறிந்து விட்டு போரடலாம். அப்போது அகதிகளாக யாரும் ஓடி போக மாட்டார்கள். புலிகளுக்கு பக்க பலமாய் இருந்து போராடுவார்கள். உலகநாடுகளின் ஆதரவும் கிடைக்கும்//
ஆஹா! எங்கே தீபெத்? எங்கே தலே லாமா? எங்கே பர்மா? எங்கே அங் சன் சுசி?
//ஆயுத சண்டையால் சமாதானம் வராது. சத்தமும், ரத்தமும் தான் வரும். முடிவில் பிணம் தின்னும் கழுகுகள் தான் சுதந்திரமாய் வானில் பறக்கும் உண்ட களைப்போடு.//
அணுஆயுதச்சண்டை பற்றி அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து நாடுகளும் இந்த அறிவுறுத்தலைத்தான் இந்தியாவுக்கு முன்னர் கூறினார்கள்!
//பின் குறிப்பு: ரத்த வெறி பிடித்தவர்களால் தன் இன்னுயிரை இழந்த அப்பாவி தமிழர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரியட்டும்.//
Escapeism?
At Sat Jun 24, 10:29:00 PM EDT, Gyanadevan said…
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி
At Sat Jun 24, 10:30:00 PM EDT, Anonymous said…
மிகவும் தரங்கெட்ட தளம் உம்முடையது
At Sat Jun 24, 10:31:00 PM EDT, Gyanadevan said…
வருகைக்கு நன்றி மயூரன்
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்க காந்தியும் நேருவும் இன்ன பிற தலைவர்களும் எத்தனை வெடிகுண்டுகள் இந்தியாவில் வைத்தார்கள்? எத்தனை குண்டுகள் இங்கிலாந்தில் வைத்தார்கள்?
At Sat Jun 24, 10:31:00 PM EDT, Gyanadevan said…
வருகைக்கு நன்றி அருண்
வெங்காயம் இரத்தத்தை சுத்தம் செய்யுமாமே?
At Sat Jun 24, 10:31:00 PM EDT, Gyanadevan said…
வருகைக்கு நன்றி கொண்டோடி
நான் போர் நிறுத்த முறைகளை ஆராய்ந்தால் நீங்கள் போர் உருவான கதையை ஆராய்கிறீர்கள்!
At Sun Jun 25, 06:12:00 AM EDT, Anonymous said…
Hello, Its really well said. The current on going issued in Sri Lanka will never come to an end.
The reasons :
a) If the issue come to an end, all the countries will ask the srilankan refugees to go back to their countries, whicn none of them like/prefer due to the sophesticated life. For that, they are ready to pump funds to LTTE whenever thers is a light of PEACE, which they are doing now also.
b) LTTE itself wont allow PEACE because if there is a PEACE, then they won't get money from the people who got assylum in foreign countries.
To conclude, the current ongoing issue in Sri Lanka will never end because none of them like PEACE there in reality. They should made themselves lead their life peacefully with their fellow citizens.
Post a Comment
<< Home