வன்முறைவாதிகளுக்கு மட்டும்
முன் குறிப்பு
* இப்பதிவு எந்த ஒரு அப்பாவி இலங்கை தமிழருக்கும் பொருந்தாது. இது வன்முறை மார்க்கத்தை மட்டும் நம்பும் வன்முறைவாதிகளுக்கு மட்டும்.
1. தீவிரவாதிகளுக்கும், புலிகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கிறது. தீவிரவாதிகள் எதிரிகளையும், எதிரியை சார்ந்த மக்களையும் மட்டும் தான் கொல்கிறார்கள், ஆனால் புலிகள், தம்மக்களையும் விட்டு வைப்பதில்லை. அதனால், புலிகளை தீவிரவாதிகளுடனும் கூட ஒப்பிட முடியாது. தீவிரவாதிகளையும் விட மோசம்.
2. மக்களுக்காக போராடுகிறேன் என்று சுடுக்காட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
3. ஏதோ இலங்கையில் மட்டும் தான் பிரச்சினை அதற்க்கு வன்முறை தான் தீர்வு என்று மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு, அவர்களையும் அச்சூழலில் இழுத்து விடுகிறார்கள்.
4. இந்தியாவை சகோதர பூமி என்பவர்கள் என்றால், இந்திய சுதந்திர போராட்டம் எப்படி நடந்தது என்பதை படிக்கலாமே?
5. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்றால் எப்போது போர் முடியும்? இன்னும் எவ்வளவு தான் சண்டை போடுவது என்று யோசிக்க வேண்டாமா? தமிழர் தலைவன் என்ற பதவிக்கு தான் இத்தனை சண்டைகளும் என்று யோசிக்க வைக்கிறது.
6. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு தான் பதில் என்றால் இழப்பு இருவருக்குமே. பிறகு யாரையும் குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை. புலிகளும் குற்றவாளிகளே, சிங்களரும் குற்றவாளிகளே.
7. என் ராஜ்ஜியத்தில் சிப்பாய்களுக்கு மட்டுமே இடம், மக்கள் தேவை இல்லை என்ற மனோபாவம் புலிகளுக்கு மாற வேண்டும். (அகதிகளாக இடம் பெயர்வதையும் இப்போது தடுப்பதாக படித்தேன்)
8. ஏற்கனவே இரண்டு தலைமுறைகளை இழந்து விட்டு, இப்போது மூன்றாவது தலைமுறையையும் முடக்குவது என்று முடிவு செய்து விட்டார்கள்.
9. தங்கள் பாதையை மாற்றி ஆயுதங்களை எறிந்து விட்டு போரடலாம். அப்போது அகதிகளாக யாரும் ஓடி போக மாட்டார்கள். புலிகளுக்கு பக்க பலமாய் இருந்து போராடுவார்கள். உலகநாடுகளின் ஆதரவும் கிடைக்கும்.
10. ஆயுத சண்டையால் சமாதானம் வராது. சத்தமும், ரத்தமும் தான் வரும். முடிவில் பிணம் தின்னும் கழுகுகள் தான் சுதந்திரமாய் வானில் பறக்கும் உண்ட களைப்போடு.
பின் குறிப்பு: ரத்த வெறி பிடித்தவர்களால் தன் இன்னுயிரை இழந்த அப்பாவி தமிழர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரியட்டும்.