தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Thursday, August 12, 2004

பின்னூட்டம்

இது சாகரனின் பின்னூட்டத்திற்க்கு பின்னூட்டம். பெரிதாக இருக்கிறது என்று நான் இதை ஒரு பதிவாக போட்டு விட்டேன்.

பாதிக்கப்பட்ட நண்பன் இப்போது இதையெல்லாம் படிக்கும் நிலையில் இல்லை. அவனுக்கும் இணையத்துக்கும் தொலைவு அதிகம். அப்படியே படித்தாலும் ஒன்றும் பெரிதாய் எடுத்துக்கொள்ள மாட்டான் என்றே நினைக்கிறேன்.. காலம் அவன் காயத்தை மறைத்து இருக்கும்...

இந்த ஓரினசேர்க்கையாளர்களின் தொல்லை, பேருந்து, சினிமா கொட்டகைகளில் அதிகம். ஒருமுறை நான் இரவு நேர பேருந்தில் செல்லும் போது (சென்னையிலிருந்து சேலம்) என் அருகில் ஒரு ஓரின சேர்க்கையாளன், நான் கண் அசந்தால் மெதுவாக தொடையில் கை வைப்பதும், முறைத்தால் எடுப்பதுமாக இருந்தான். நடத்துனரிடம் சொல்லி அவனை கடைசி சீட்டுக்கு துரத்தினேன். மற்றொரு முறை (இதுவும் சென்னையிலிருந்து சேலம்) கடைசி சீட்டில் அவனும், அதற்கு முந்தின சீட்டில் நானும் இருந்தேன். 1 முறை என் இடுப்பில் கை வைத்தான், திரும்பி முறைத்ததற்கு, தெரியாமல் பட்டுவிட்டது சார் என்று இளித்தான். இரண்டாம் முறை கை வைத்த போது எழுந்து கத்தி விட்டேன். அவன் கொஞ்சம் மிரண்டு கடைசி சீட்டின் அடுத்த முனைக்குப் போனான். ஒரு அரை மணி நேரம் கழிந்திருக்கும். எனக்கு தூக்கம் வர ஆரம்பித்த நேரம். பட் பட் மடார் என்று ஒரு சத்தம்"தே... மகனே, கை வைக்கிறியாடா கேன... " என்று ஒரு கூச்சல். கடைசி சீட்டின் அந்த முனைக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த இருவர் அவனை சுற்றி வளைத்து அடிப் பின்னிக் கொண்டிருந்தனர். வலி தாங்காமல் அவன் அழுது கொண்டிருந்தான். அவன் சட்டையை பிடித்து தர தரவென இழுத்துக்கொண்டு போய், நடத்துனரிடம் சொல்லி, பேருந்தை நிறுத்தி திண்டிவனம் அருகே எங்கேயோ இறக்கி விட்டார்கள். பின்னர் தான் நிம்மதியாக தூங்க முடிந்தது...

இதை எல்லாவற்றையும் விட மிக கொடுமையான ஒன்று என் தோழிக்கு நிகழ்ந்தது. அதை இன்னொரு சமயம் பதிக்கிறேன். இப்போவே தொடர்ச்சியா அதை பதித்தால் ஏதோ பாலியல் சம்மந்தப்பட்ட வலைப்பதிவுன்னு எல்லாரும் நினைச்சிட போறாங்க. :-)

2 Comments:

  • At Thu Aug 12, 06:07:00 AM EDT, Blogger சாகரன் said…

    இது போன்ற சிறு சிறு சம்பவங்கள் எனக்கும் நடந்துள்ளன. நினைவிற்கு வருபவையில் சில...

    கல்லூரிக்கு தினசரி ரயிலில் செல்லும் அவசியம் என்க்கு. ரயில் பயணம் சுமார் 1 மணி நேரம்.
    சில தினங்களில் ரயிலில் கூட்டமே இருக்காது. அது போன்ற நேரங்களில் எதாவது ஒரு ஆளில்லாத கம்பார்ட்மெண்டில்
    ஏறி படுத்துவிடுவது என் வழக்கம். ஒரு முறை நல்ல தூக்கத்திற்கே சென்று விட்டேன். திடீரென்று ஏதோ தொடை இடுக்கில்
    ஊடுறுவது போல தோன்றி திடுக்கிட்டு விழித்தால். ஒரு ஆள் கையை பேண்டின் மேல் வைத்து அழுத்திக்கொண்டிருக்கிறான்!

    சட்டென்று எழுந்து உட்கார்த்தவுடன், சாரி.. என்று சொல்லி வேகமாக அடுத்த கம்பார்ட்மெண்ட் மூவ் செய்து விட்டான்.
    நானும் ஏதோ சாதாரண்மாக இருக்க, மீண்டும் படுத்த போது, மறுபடி அதே வேலை. இப்பொழுது நிஜமாகவே எரிச்சல் அடைந்தேன்.... கடுப்படித்து திட்டிய பிறகு "சாரி சார், மன்னிச்சுக்கங்க சார்" என்று சொல்லி வேகமாக ஓடி, அடுத்த ஸ்டேஷனில் இறங்கி வேறு கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொண்டான். அப்புறம் தான் பிரச்சனை ஓய்ந்தது.

    இதே போன்ற சிறு சிறு சம்பவங்கள் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்டிருக்கின்றன.

    இது இன்றைக்கும் சிறுவர்களின்/இளைஞர்களின் தவிர்க்க முடியாத பிரச்சனையாகவே இருந்து வருகிறது. பலர், சொல்லத் தயங்கலாம். ஆனாலும் அனுபவம் இருந்திருக்கும்.

    ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ளவர்கள் எங்கும் இருக்கிறார்கள். பலர், சிறு முகச் சுணுக்கத்திலேயே விலகிவிடக்கூடியவர்கள்.
    வெகு சிலரே, பலாத்காரம் செய்யும் அளவிற்கு கொடுமனம் படைத்தவர்கள் என்று தோன்றுகிறது.

     
  • At Thu Aug 12, 06:33:00 AM EDT, Blogger Gyanadevan said…

    சாகரன் நீங்கள் சொல்வது சரி தான். பொது இடத்தில் இப்படி முயற்சி செய்து பார்ப்பவர்கள் ஒரு சிறு முக சுணுக்கத்தில் விலகி செல்லலாம். ஆனால் தனிமையில் மாட்டிக்கொண்டால்?? ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், ஓரினசேர்க்கையாளர்கள் கும்பலாக அலைவதில்லை என்று நம்புகிறேன். அதனால் தான் பெரிய அளவில் எதுவும் நடப்பதில்லை. முக்கியமாய் நாம் நம் இளையவர்களுக்கு இதை பற்றி எல்லாம் சொல்லி தந்து உஷார்படுத்த வேண்டும். அதற்கு கட்டாயம் பாலியல் கல்வி அவசியம். எனக்கு 3 தம்பிகள்(சித்தப்பா மகன்கள்) இருக்கிறார்கள். நான் கற்றதை எல்லாம் எப்போது, எப்படி சொல்லி அவர்களை விளங்க வைப்பது என்று புரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது.

    விரசம் இல்லாத, ஆபாசம் இல்லாத பாலியல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால் சொல்லுங்களேன் யாராச்சும்...

     

Post a Comment

<< Home