தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, August 11, 2004

"வலி" - PART - 3

****
இந்த குறிப்பிட்ட பதிவு சில அருவெருப்பான நிகழ்வுகளை சொல்லப்போகிறது. தயவு செய்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள் தவிர்த்து விடவும்
****


இவ்வளவு தூரம் சொன்ன வசந்த் அந்த இடத்தில் தடுமாறினான். கண்கள் வேகமாக கலங்கின.

"சொல்லு அதுக்கு மேல" என்றேன் இறுக்கத்துடன்.

வசந்த் தொடர்ந்தான்

"சொல்லவே அசிங்கமா இருக்குடா. அந்த ஆள் மடியிலே உட்கார்ந்ததும் தான் ஒரு வித்தியாசம் கவனிச்சேன். பைஜாமாக்குள்ளே ஜட்டி, அண்டர்வேர் எதுவும் இல்லை. அந்த ஆளோட ----- என் பின் பக்கம் உறுத்திச்சி.... உடனே எந்திரிக்க பார்த்தேன்... அப்போ சேட் சொல்றான்"

சேட் " என்ன வசந், பயம்மா இருக்கா? இது தப்பில்லே, அது உன்கிட்ட இருக்குற மாதிரி தான். பயப்படாதே. வேணா தொட்டு பாரு"ன்னு சொல்லிகிட்டே என் கை எடுத்து அந்த கண்றாவி மேல வச்சிட்டான். விலுக்குன்னு என் கையை உருவி அவன் மடி விட்டு எந்திரிச்சி ..

"சேட்ஜி எனக்கு இதெல்லாம் பிடிக்காது.. விட்டுடுங்க.. எனக்கு வேலை வேண்டாம், மெட்ராஸ், நடிகை யாரும் வேண்டாம், வீட்டுக்கு போறேன் விட்டுடுங்க"ன்னு கெஞ்சினேன்.
ஆனா அவன் கேட்கலேடா. கதவு நல்லா பூட்டி இருந்திச்சி. சாவி அவன் பைஜாமாவுல இருந்திச்சி. எனக்கு அழுகை வந்து அழுதேன். பொறுமையா பார்த்துகிட்டு இருந்தான். அப்புறம்

"வசந், நீ அழுறதுல எந்த உபயோகமும் இல்லே.. நீ இப்படியே வெளியே போக முடியாது.. நான் சொல்லுற படி செய்.. போலாம்" என்றான் சேட்.

அதுக்கு அப்புறம், நான் கையால தொடவே அருவெருப்பா நினைச்சுது என் உடம்பு பூரா ஊர்ந்து போச்சு.. என் வாயிலே அசிங்கம் பண்ணிட்டான்.. 2 நாள் வாந்தியா வந்துச்சி. பின் பக்கம் வலி தாங்க முடியாம 2 நாள் கக்கூஸ் கூட போகலடா.." என்று அவன் குலுங்கி குலுங்கி அழுததை பார்த்து எனக்கும் அழுகை வந்து விட்டது.

இரவு, நேரம் ஆகி விட்டதால் இருவரும் திரும்பி வந்தோம். வரும் போது அவன் கொஞ்சம் ரிலாக்ஸ்ஸாக இருந்தான். பாரத்தை இறக்கி வைத்த திருப்தி இருந்தது அவனிடம். நான் மௌனமாக வந்து கொண்டிருந்தேன். இப்போது எனக்கு பாரமாக இருந்தது. அவன் இப்போது பேசினான்

"என்ன உம்முன்னு வர்றே? நானும் இதை நினைச்சி 3 நாள் அழுதேன். அப்புறம், சீ தூன்னு துப்பிட்டு சகஜம் ஆயிட்டேன். இனி அந்த ஆள் முகத்துல முழிக்காத வரை எனக்கு அந்த ஞாபகம் வராது. நீ ஏன் இப்போ சைலென்டா வர்றே. சொல்லு" என்றான்

சைக்கிளை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தேன். அவனும் நிறுத்தினான்.

"நீ எவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கே தெரியுமா?" என்று கேட்டேன்.

"என்ன உதவி, யாருக்கு, எப்படி" என்றான்.

"எனக்கு தான்.. நீ வேலையை விட்டு போனதாலே, நான் எங்க வீட்டுல பேசி, நாளையில் இருந்து அந்த சேட்டுகிட்டே வேலைக்கு போறதுக்கு ஒப்புதல் வாங்கிட்டேன். வீட்டுல ஒத்துகிட்டாங்க. சேட்டும் ஒத்துக்கிட்டான்."

"வேண்டாம்டா போகாதே" என்றான் பதற்றத்துடன்.

"போக மாட்டேன்" என்று சொல்லிவிட்டு மீண்டும் கிளம்பினோம்.

இப்போது அவனுக்கு பெருமையாய் இருந்திருக்கும், தன் நண்பனை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றி விட்ட சந்தோசம் அப்போதே அவனுக்கு தெரிந்தது.

***********

ஒரு கொடூரமான ஓரின சேர்க்கையாளனால் இத்தகைய கொடூரமான அபாயம் இருப்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். .மனைவி, மகள், மகன் என அனைத்தும் இருந்தும், அந்த சேட்டுக்கு ஓரின கவர்ச்சி இருந்தது... அதனால் உரிமை கேட்கும் ஓரினத்திற்க்கு சலுகை அளிப்பது நல்லதா கெட்டதா என்பது யோசிக்கப் பட வேண்டிய விஷயம். எனக்கு இதற்க்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. இத்துடன் இதை முடிக்கிறேன்.

5 Comments:

  • At Wed Aug 11, 08:22:00 AM EDT, Blogger சாகரன் said…

    ஓரினச்சேர்க்கை என்ற விசயம் கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்றுதான்.
    இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்ட உங்கள் நண்பருக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது.

     
  • At Wed Aug 11, 09:29:00 AM EDT, Blogger Gyanadevan said…

    சாகரன், இந்த விஷயம் இத்துடன் முடியவில்லை.. இன்னும் சில விஷயம் சேர்க்க வேண்டி இருக்கிறது. அதை எல்லாம் எழுதி ஒரு பதிவாகவே போட்டு விடுகிறேன்.

     
  • At Wed Aug 11, 10:00:00 AM EDT, Blogger Boston Bala said…

    >>>>ஒரு கொடூரமான ஓரின சேர்க்கையாளனால் இத்தகைய கொடூரமான அபாயம்
    >>>>உரிமை கேட்கும் ஓரினத்திற்க்கு சலுகை அளிப்பது நல்லதா கெட்டதா

    ஓரின சேர்க்கையாளர்களிடமும் வில்லன்கள் இருக்கிறார்கள். ஹீரோயினின் தங்கச்சியை வன்புணர்வது போல், அவர்களிடையேயும் சிலர் தவறு செய்கின்றனர். ஒரு மனிதன் (ஆணோ, பெண்ணோ) தவறு செய்வதால், ஒட்டுமொத்த மனிதகுலமே காமாந்தகர்கள் என்று சொல்வது போல் generalization வேண்டாமே :-)

    எனக்கு சில gay நண்பர்கள் உள்ளனர். விருப்பமுள்ளவர்களுடன் மட்டுமே இணைவது, (மேற்கத்திய வழக்கப்படி) சேர்ந்து வாழ்ந்து ஒத்திசைவை அறிந்து கொள்வது, பின் திருமணம் முடிப்பது என்று கண்ணியத்துடன் இருக்கிறார்கள். நமக்கு எதிர்பாலாரிடம் விருப்பம்; அவர்களுக்கு அதே பாலாருடன் விருப்பம்.

    அனைத்து 'கே' மக்களையும் 'சேட்'டைப் போலவே எண்ண வேண்டாம். In a repressed society, he is an exception.

     
  • At Wed Aug 11, 11:01:00 AM EDT, Blogger Gyanadevan said…

    இல்லை பாலா. நிச்சயமாய் இல்லை. நான் பொதுபடையாய் அனைவரையும் சொல்லவில்லை. எந்தவித உரிமையும் இல்லாத போது இப்படி மறைமுகமாய் நடக்கிறது என்கிற போது, உரிமையும் குடுத்து விட்டால், அறியா சிறுவர்களிடம் "இதெல்லாம் தப்பே இல்லே. அரசே அனுமதிக்குது" என்று சொல்லி, அவர்களையும் இதில் உட்படுத்திவிடுவார்களோ என்ற பயம் தான். ஓரினசேர்க்கை மூலமும் எய்ட்ஸ் பரவும் என்பது இன்னொரு பயம்...

     
  • At Thu Aug 12, 12:23:00 PM EDT, Anonymous Anonymous said…

    Gyanadevan

    What happened to your friend was bad and should be condemned. But you need to understand the difference between Rape and Sex. Currently there is no law banning sex/marriage between opposite sex. But it doesn't mean that any man can mount on every other woman he sees on the street.

    Everyday we read about women and children being raped. And most of these repoerted cases involve heterosexual activities. Does it mean that the government has to ban all heterosexual relationships?

    Think abt it and as BB says it is not good to generalize!

    -dyno

     

Post a Comment

<< Home