எல்லாம் 1 பவுண்டு
"நண்பா, இங்க பாருடா, எந்த புத்தகம் வாங்கினாலும் 1 பவுண்டுதான் விலையாம். இன்னைக்கே அப்ளை பண்ணப்போறேன்... உனக்கு வேண்டுமா? எல்லா புத்தகமும் இருக்கு.."
என்று சொன்ன என் நண்பன் கையில் ஒரு துண்டு பிரசுரம் இருந்தது.. சந்தேகமாய் பார்த்தேன்..
"நீ அப்படி பார்க்காதே.. இந்த பேப்பர்ல இருக்குறது அவங்க விலாசம், அப்புறம் கிப்ட் நம்பர். அவ்வளவு தான். புத்தக லிஸ்ட் நாம நெட்ல தேடலாம். வாடா கனெக்ட் பண்ணு"
என்று பரபரத்தான். நான் அவனுடைய ஆர்வத்தை குலைக்க விரும்பாமல்
"கனெக்ட் ஆகி தான் இருக்கு, போய் தேடு"
என்று சொல்லி விட்டு டிவியில் மூழ்கினேன்.
"சூப்பர்... நண்பா.. இங்கே வா, வந்து பார்.. புத்தக லிஸ்ட் பார்த்தா நீயும் உடனே உறுப்பினர் ஆயிடுவே.." என்றான்
ஆர்வம் உந்தி தள்ள எழுந்து சென்று பார்த்தேன். புரிந்தது என் நண்பனின் விழிகள் விரிந்ததற்கு காரணம். செக்ஸ் லைப்.. காமசூத்ரா.. லவ்வர்ஸ் பொசிசன்ஸ் என்று விவகாரமான புத்தகங்களின் அணிவகுப்பாய் இருந்தது.
"இதையா வாங்க போறே?? " என்றேன்.
" ஆமாம்டா இந்த வயசுல இதை வாங்காம வேற என்ன வாங்குறது" என்றான். சரி என்று நானும் அவனுக்கு உதவி செய்து 3 புத்தகங்கள் தேர்வு செய்தோம். மொத்தம் 3 பவுண்டு + தபால் செலவு 3 பவுண்டு சேர்த்து காசோலை அனுப்பினோம்.
1 வாரத்தில் புத்தகங்கள் வந்து சேர்ந்தது. ஒவ்வொன்றும் 20 பவுண்டு விலையாவது இருக்கும். படித்தோமோ இல்லையோ, படம் மட்டும் பார்த்து தூக்கி போட்டுவிட்டோம், எல்லாம் வெறும் ஓவியங்களாக இருந்தது. 2 நாளில் அவை ஏதோ ஒரு மூலைக்கு போய்விட்டது.
20 நாள் கழித்து அந்த புத்தக மையத்தில் இருந்து ஏதோ கடிதம் வந்தது. வாங்கிய புத்தகங்களுக்கு ரசீதும், மேலும் பல புத்தகங்களின் விவரங்களும் அடங்கி இருந்தது. அவன் அதை கண்டு கொள்ளவே இல்லை. 20 நாள் கழிந்தது. திடீரென ஒரு பார்சல் வந்தது. பிரித்துப் பார்த்தால், இங்கிலாந்தின் அரசியல் வரலாறு அடங்கிய தலையணை சைஸில் உள்ள ஒரு புத்தகமும் அதற்கு 30 பவுண்டு கட்ட வேண்டும் என்ற ஆணையும் இருந்தது. உடனே அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தோம். இது போல நாங்கள் எந்த புத்தகமும் ஆர்டர் செய்ய வில்லை, தவறுதலாக அனுப்பி விட்டீர்கள் என்று. ஆனால் அவர்களின் பதில் வித்தியாசமாய் இருந்தது.
அவர்கள் முன்னமே அனுப்பிய கடிதத்தில் இந்த புத்தகத்தை பரிந்துரை செய்து இருந்தார்களாம். அதை "தேவை" அல்லது "தேவை இல்லை" என்று குறியிட்டு நாம் அவர்களுக்கு திருப்பி அனுப்பி இருக்க வேண்டுமாம். அப்படி பதில் சொல்லத் தவறினால் "தேவை" என்று அவர்களே நினைத்துக் கொண்டு அந்த புத்தகத்தை அனுப்பி விடுவார்களாம். இது நல்ல கதையாய் இருக்கிறதென்று உறுப்பினர் பதிவை ரத்து செய்ய சொன்னால்.... " 1 வருடம் இந்த புத்தக மையத்தில் உறுப்பினராக இருந்து, குறைந்த பட்சம் 2 புத்தகமாவது வாங்குவேன்" என்ற விதியை ஒத்துக் கொண்டு தான் சேர்ந்திருப்பதால் ரத்து செய்ய முடியாது என்றும், அப்படியே செய்ய வேண்டுமென்றால் வாங்கிய எல்லா புத்தகங்களுக்கும் உண்மையான விலையை குடுக்க வேண்டுமாம். உண்மையான விலை 100 பவுண்டுக்கு மேல் போனது.
மாதாமாதம், பொறுப்பாக அவர்களின் கடிதத்திற்க்கு என் நண்பன் பதில் போட்டுக் கொண்டிருக்கிறான்.

0 Comments:
Post a Comment
<< Home