நாளை மறுநாள்
"நாளை மறுநாள்" (day after tomorrow) திரைப்படம் உண்மையாகி விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. போன வாரம் பிபிசியில் ஒரு விவரணப்படம் காட்டப்பட்டது. அதில் உலகம் பிறந்ததில் இருந்து இன்றுவரை அது அடைந்துள்ள மாற்றங்களை தெள்ள தெளிவாக காட்டி, எதிர்காலத்தில் என்ன நடக்கலாம் என்றும் கணித்து சொல்லியது. கிட்டதட்ட திரைப்படத்தில் சொன்னதை தான் இதிலும் சொன்னார்கள் ( இதிலிருந்து தான் அவர்கள் சுட்டார்களா தெரியாது :-). மொத்தத்தில் சாராம்சம் இது தான், இப்போது சுற்றிகொண்டிருக்கும் உலகம் எப்போது வேண்டுமானாலும் பேரழிவுகளை நிகழ்த்தலாம்.
தூங்கி கொண்டிருக்கும் எரிமலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் வாழ்க்கையை கடன் வாங்கி இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் இயற்கை ஜப்தி செய்யும். எரிமலைகள் முழிக்கும் போது லட்சகணக்கான மக்கள் மாள்வது உறுதி :-( ஆயிரம் செயற்கை கோள்கள் இருப்பினும் இயற்கையின் இயல்புகளை கவனிக்கவோ, கண்டுபிடிக்கவோ முடியாமல் மனிதன் தடுமாறுகிறான் என்பது உண்மை. பொதுவாக இப்போது உலகம் எங்கிலும் பல இயற்கை சீரழிவுகள், புது புது உயிர் கொல்லி நோய்கள் வந்த வண்ணம் உள்ளது. உயிர்களை பறிப்பதிலும் அது இரக்கம் காட்டுவதில்லை.
விபத்துகள் பெருகி விட்டன. தற்கொலைகளும், கொலைகளும் கூட எண்ண முடியாத அளவிற்கு அதிகரித்து விட்டன. என்னதான் புது தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மரணங்களின் எண்ணிக்கை குறையவில்லை. நாமும் சும்மா இல்லாமல், அது வேண்டும், இது வேண்டும் என்று, அடுத்த நாட்டுடன் போரிட்டு மடிகிறோம். உயிர் இப்போது மதிப்பில்லாமல் போய்விட்டது. உயிர் போய் விடுமோ என்ற பயத்தில் தான் ஒவ்வொருவரும் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுகிறோம். எதுவும் நிரந்தரமில்லை என்ற சூழல் வந்து கொண்டிருக்கிறது. நம்மை நாமே அழித்து கொள்வதை தவிர்த்துப் பார்த்தாலும், வாழ்க்கையின் நீளம் மிக குறைவாகவே இருக்கிறது.
மிதக்கும் கண்டங்கள் எல்லாம் பிரிந்து மேலும் புதிய கண்டங்களை உருவாக்கும் என்று சொல்கிறார்கள். அது நடக்க சில ஆயிரம் வருடங்கள் ஆகலாம். ஆனால் எதுவும் நிச்சயம் இல்லை என்றே நம்புகிறார்கள். பூமிக்கு அடியில் எதுவும் நடக்கலாம், நாளைக்கே ஆப்பிரிக்கா அறுந்து வந்து இந்திய நிலப்பரப்பில் மோதலாம். மோதலின் வேகத்தில் இமயமலை இன்னும் சில கிலோ மீட்டர்கள் உயரம் கூடலாம். இந்தியாவில் 5 முதல் 6 தென்மாநிலங்கள் இல்லாமல் போய் விட கூடும். ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள ஒரு சாலை ஓர விரிசல் இந்த கண்டம் பிரிதலை விளக்குகிறது. அந்த விரிசல் 3 நாடுகளை கடந்து நீள்கிறதாம். இன்றில்லாவிடாலும் என்றேனும் இது பிரிந்து விடும் என்று கருதுகிறார்கள்.
வருங்கால முதல்வர்கள் எல்லாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
(பி-கு) இதற்கெல்லாம் சுட்டி கேட்காதீர்கள். நான் படித்ததின்/பார்த்ததின் தொகுப்பு இது. அவ்வளவு தான்.

1 Comments:
At Thu Jul 22, 02:23:00 AM EDT, Gyanadevan said…
testing - gyanadevan
Post a Comment
<< Home