தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, September 01, 2004

உட்கார்ந்து கொண்டே கிரிக்கெட்

பகல் நேரத்துல தொலை தூர பஸ்லே போறீங்களா?
தூக்கமும் வரலியா?
படிக்க புத்தகமும் இல்லையா? (ஆமாம்பா ஆமா!!!!)

இதோ உங்களுக்காக சில பஸ் விளையாட்டுக்கள். பஸ் மட்டும் இல்லே, கார்'லே பேமிலியா(family) போகும் போதும் இந்த விளையாட்டுகளை நீங்க விளையாடலாம்.

முதலில் கிரிக்கெட் :-
இதை விளையாட குறைந்தது 2 பேர் வேண்டும். இது இந்தியாவில் வாழ்பவர்க்கு மட்டும் பொருந்தும். வெளிநாட்டில் உள்ளவர்கள் வேறு மாதிரி விளையாட வேண்டும், அது பிறகு.

முதலில் யார் பேட்(bat) செய்வது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.பஸ் அல்லது கார், நகர எல்லையை தாண்டியதும் இதை ஆரம்பிக்கவும். விளையாடும் போது நகரம் வந்து விட்டால் சற்று இடைவெளி விட்டு மீண்டும் நகரம் முடிந்ததும் விளையாட தொடங்குங்கள்.

நீங்கள் பயணம் செல்லும் போது உங்களுக்கு எதிரே வரும் வாகனம் தான் உங்களின் ரன். அதாவது 2 சக்கர வாகனம் என்றால் 1 ரன்னும், 4 சக்கர வாகனம் என்றால் 2 ரன்னும், லாரி வந்தால் 4 ரன்னும், பஸ் வந்தால் 6 ரன்னும் என்று வைத்துக் கொள்ளவும். மிதிவண்டிகளுக்கு எல்லாம் ரன் கிடையாது. உங்களின் வாகனத்தை இன்னொரு வாகனம் முந்தி சென்றாலோ, அல்லது நீங்கள் மற்றொரு வாகனத்தை முந்தி சென்றாலோ அவுட் ஆனதாக அர்த்தம்.

உங்களின் பயண நேரத்தை பொருத்து ஒருவருக்கு எத்தனை அவுட் அல்லது எத்தனை நிமிடம் என்று கணக்கு வைத்துக் கொள்ளலாம், குறிப்பிட்ட நேரத்துக்குள் அவுட் ஆகாமல், நிறைய ரன் யார் எடுக்கிறார்களோ அவர்கள் வென்றவர்கள்.

2க்கு மேற்பட்டவர்கள் இருந்தாலும் விளையாடலாம், ஒரு குழுவாகவும் விளையாடலாம். லாஜிக் சொல்லிவிட்டேன். இனி விதிமுறைகளை எல்லாம் சேர்த்து விளையாடுவது உங்கள் பொறுப்பு.

(முக்கிய குறிப்பு)
நீங்கள் காரில் போகிறீர்கள் என்றால் ஓட்டுனரை சேர்த்துக் கொள்ளாதீர்கள். பிறகு வேகமாகவோ இல்லை மெதுவாகவோ ஓட்டி ஒரு அணியிணரை தோற்கடித்து விடுவார்.

இது வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு:
ப்ரீ வே(free way), மோட்டார் வே(Motor way) இவற்றில் செல்லும் போது, உங்கள் வாகனம் எந்த வாகனத்தை முந்துகிறதோ அதற்கு தகுந்த ரன்னை கூட்டிக் கொள்ளவும். உங்கள் வாகனம் முந்தப் பட்டால் அவுட் ஆனதாக அர்த்தம்.மற்ற சாதாரண சாலைகளில் இந்திய முறைப்படி ஆடலாம்.

அடுத்த விளையாட்டு .....
(பி-கு) தனியாக செல்பவர்கள் தங்களையே 2 அணியாக/பேராக நினைத்துக்கொண்டு விளையாடலாம் :-)

2 Comments:

  • At Wed Sep 01, 04:06:00 AM EDT, Blogger Unknown said…

    //அடுத்த விளையாட்டு .....
    (பி-கு) தனியாக செல்பவர்கள் தங்களையே 2 அணியாக/பேராக நினைத்துக்கொண்டு விளையாடலாம் :-)//

    ஊர்ல ஒருத்தனும் வண்டி ஒழுங்கா ஓட்டக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டிங்களா :-)).

     
  • At Wed Sep 01, 02:43:00 PM EDT, Blogger Gyanadevan said…

    ஓட்டுனர் ஆட்டத்தில் இல்லாத வரை ஆட்டம் நல்லா இருக்கும். அவரை சேர்த்துகிட்டா அப்புறம் அடிச்சி ஆட ஆரம்பிச்சிடுவார் ;-)

     

Post a Comment

<< Home